உதிர்ந்து போன
மலர்கள்
கடைசியாக வீசிய மணம்..
நேற்றைய
மழையில்
இன்று வரை இருக்கும்
மண் வாசம் ...
மறையும்
சூரியனின்
மாலை வானத்து ஒளி...
நகரத்தின் அடர்ந்த
மனிதத் தலைகளை
அடுத்து இருக்கும்
என் தனி வீடு...
கடலலை
நடுவில்
முதலில்
சுவைத்த மழைத் துளி....
அம்மாவின்
மார்பில் கடைசியாக
சாய்ந்த தருணம்...
என்றோ
என் முகம்
வருடிச் சென்ற
குழந்தையின் விரல்கள்...
எனக்கான
என்
தந்தையின்
வாழ்க்கை..
இவை
அனைத்தையும்
விட
இன்னமும்
கணத்துக் கொண்டே
இருக்கிறது
அவள் நினைவுகள்
இதயத்தில்...
Wednesday, October 27, 2010
Tuesday, October 26, 2010
வளையல்கள்
எங்கிருந்து கிடைக்கிறது
இத்தனை வண்ணங்களில்
வளையல்கள்...
உனக்கு மட்டும் ...
எப்பொழுது அவை
உடையும் ...
காத்திருக்கிறது
என் செல்லப்பெட்டி ....
Sunday, October 17, 2010
" சுடிதார் சூனியக்காரி "
வலைப்பதிவு உலக நண்பர்களுக்கு என் அறிமுகம்
என் கவிதை இதுவரை நான் அறிந்தோர் வரை பெற்ற விமர்சனங்களையும் , என் கவிதை சாரல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள இதனை வாய்ப்பாக கருதுகிறேன் .
Subscribe to:
Posts (Atom)
